இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின்போது சாம் கர்ரனுக்கு காயம் ஏற்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதியானது.
இதனால் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் சாம் கர்ரன் இங்கிலாந்து செல்ல இருக்கிறார். அங்கு மற்றொரு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டடு காயம் குறித்து முழுமையாக ஆராயப்படும். இந்த காயத்தால் ஐ.பி.எல். 2021 தொடரின் எஞ்சிய போட்டிகளிலும், ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரிலும் சாம் கர்ரன் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.