Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் 2023 – மும்பை, குஜராத் அணிகள் இன்று மோதல்

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி, இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் களமிறங்குகின்றன.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்ன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

இதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 3 வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் சந்தித்து 6 புள்ளிகளுடன் உள்ளன.

இந்நிலையில், இன்றைய 7வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே பலப்பரீட்சை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.