X

ஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா

மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக ஆடினார். அவர் 54 பந்தில் 80 ரன் விளாசினார்.இதில் 6 சிக்சர்கள் அடங்கும்.

இதன்மூலம் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களை எடுத்து முத்திரை பதித்தார். 185 இன்னிங்சில் அவர் இதை சாதித்தார். ஐ.பி.எல். வரலாற்றில் 200 சிக்சர்களை எடுத்த 4-வது வீரர் ஆவார். இந்திய வீரர்களை பொறுத்த வரை அவர் 2-வது இடத்தில் உள்ளார்.

கிறிஸ்கெய்ல் 326 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், டிவில்லியர்ஸ் 214 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், டோனி 212 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

டோனியை நோக்கி தற்போது ரோகித்சர்மா நெருங்குகிறார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது அவர் டோனியை முந்துவார்.