ஐபிஎல் கிரிக்கெட் – வீரர்கள் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஏற்கனவே ஏலத்தில் இருந்து விலகி விட்டனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி கேப்பிட்டல் அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20.95 கோடியையும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.20 கோடியையும், மும்பை இந்தியன்ஸ் அணி 11.15 கோடியையும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி ரூ. 9.70 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடியையும் வீரர்களை வாங்க செலவிட முடியும். வீரர்கள் ஏலம் பகல் 2.30 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools