Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 97 ரன்கள் வித்தியாசத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் விராட் கோலியின் அணி செய்யும் முதல் தவறு என்பதால், ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் படி 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு அணி அடுத்து 28ம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.