X

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

அதன்படி மும்பை அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டி காக்கும், ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். ரோகித் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ், டி காக்குடன் ஜோடி சேர்ந்து ஆடினார். டிக் காக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். சூர்யகுமார் யாதவ் 34 ரன் அடித்திருந்தபோது எதிர்பாராதவிதமாக கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த வந்த ஹர்திக் பாண்டியா, டி காக்குடன் இணைந்து ஆடினார். அதிரடியாக ஆடி வந்த டி காக் 65 ரன் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 6 பவுண்டரியும், 2 சிக்சரும் அடித்தார். அதன் பின் வந்த பொல்லார்ட் 10 ரன்னில் வெளியேறினார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 161 ரன்களை எடுத்தது.

பின்னர் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிக பட்சமாக சாம்சன் 35 ரன்னும், ரீயான் பராக் 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்டீவன் ஸ்மித் 59 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

மும்பை பந்து வீச்சாளர்கள் தரப்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டும், பும்ரா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Tags: sports news