ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன் எம்எஸ் டோனி விளையாடமாட்டார். ரெய்னாதான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர், முகுது வலி காரணமாக டோனி பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. டோனி இல்லாத இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் டோனி பங்கேற்பார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரெய்னா கூறுகையில் ‘‘டோனி சிறப்பாக இருப்பதாக உணர்கிறார். அவரது முதுகு வலி சரியாகிவிட்டது. இதனால் அடுத்தப் போட்டியில் அவர் விளையாடுவார்’’ என்றார்.