ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று சார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்னும், தேவ்தத் படிக்கல் 21 ரன்னும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 4 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஷுப்மான் கில் 29 ரன்னும், வெங்கடேஷ் அய்யர் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ராகுல் திரிபாதி 6 ரன், நிதிஷ் ராணா 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சுனில் நரைன் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். தினேஷ் கார்த்திக் 10 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது.