Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஐதராபாத்

கடைசி லீக்கில் கொல்கத்தா அணி மும்பையிடம் உதை வாங்கியதால், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்த சுற்று(பிளே-ஆப்) அதிர்ஷ்டம் கிட்டியது. லீக் சுற்று முடிவில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன.

இருப்பினும் ரன்-ரேட்டில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி (ரன்ரேட் +0.577) 4-வது அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் 12 புள்ளியுடன் ஒரு அணி அடுத்த சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

அது மட்டுமின்றி புள்ளி பட்டியலில் 4 முதல் 8-வது இடங்களை வகிக்கும் அணிகளுக்கு இடையே வெறும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருப்பது இன்னொரு ஆச்சரியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *