Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – பஞ்சாப்பை வீழ்த்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூர்

ஷார்ஜாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 48-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 33 பந்தில் 57 ரன்கள் அடித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் முகமது ஷமி, ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஸ்கோர் 10.5 ஓவரில் 91 ரன்னாக இருக்கும்போது கே.எல். ராகுல் 35 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரண் 3 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தார்.

சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 42 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 15.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் பஞ்சாப் அணியால் வெற்றி நோக்கி செல்ல முடியவில்லை.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 12 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.