X

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அதிக வருமானத்தை பெறுகிறது – சவுரவ் கங்குலி பெருமிதம்

ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் நடைபெற்று முடிந்தது. இதில் இந்த ஆண்டு அறிமுகமான குஜராத் டைடன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் ஐ.பி.எல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவிலான சிறந்த வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் இ.பி.எல்-ஐ (இங்கிலிஷ் பிரீமியர் லீக்) விட ஐபிஎல் தொடர் அதிக வருமானத்தை பெறுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-

கிரிக்கெட் போட்டி தொடர்ந்து பரிணாமவளர்ச்சி அடைந்து வருகிறது. என்னை போன்ற வீரர்கள் சில நூறுக்களை சம்பாதித்தோம். இன்று உள்ள வீரர்கள் கோடிக்களில் சம்பாதிக்கின்றனர். இந்த விளையாட்டு ரசிகர்களால், இந்திய மக்களால், பிசிசிஐயால் நடத்தப்பட்டு வருகிறது. இ.பி.எல்லை விட ஐ.பி.எல் அதிக வருமானத்தை பெறுகிறது. இந்த விளையாட்டு தொடர்ந்து வலுவடைந்து வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.