ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2023 – போட்டி அட்டவணை வெளியீடு

கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதிவரை போட்டி நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. இரண்டாவது நாளில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த சீசனில் மொத்தம் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் ஆட்டங்கள் மே 21ம் தேதி நிறைவடைகின்றன. இறுதிப்போட்டி மே 28ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools