ஐபிஎல் கிரிக்கெட் – தவானிடம் இருந்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றிய சஞ்சு சாம்சன்

ஐ.பி.எல். 2021 சீசனில் சஞ்சு சாம்சன், ஷிகர் தவான், கே.எல். ராகுல், டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஐ.பி.எல். சீசன் தொடங்கியதில் இருந்து தவான் ஆதிக்கம் செலுத்து வருகிறார். அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கும் ஆரஞ்ச் தொப்பியை தொடர்ந்து தன்வசம் வைத்திருந்தார்.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 82 ரன்கள் விளாசினார். இதன்மூலம் 10 போட்டிகளில் 433 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.
இதையடுத்து, தவானிடம் இருந்த ஆரஞ்ச் தொப்பியை தன்வசமாக்கியுள்ளார். தவான் 10 போட்டிகளில் 430 ரன்கள் அடித்துள்ளார். கே.எல். ராகுல் 9 போட்டிகளில் 401 ரன்கள் அடித்துள்ளார். டு பிளிஸ்சிஸ் 394 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 362 ரன்களும் அடித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools