X

ஐபிஎல் கிரிக்கெட் – டெல்லி, சென்னை அணிகள் நாளை மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை மும்பையில் நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் டுபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதிராய்டு, ருதுராஜ் கெய்க்வாட், டோனி ஆகியோர் உள்ளனர்.

ஆல்-ரவுண்டரில் ஜடேஜா, சாம் கர்ரன், கிருஷ்ணப்பா கவுதம், பந்துவீச்சில் தீபக் சாகர், ‌ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர், கரண் சர்மா, நிகிடி ஆகியோர் உள்ளனர்.

அணிக்கு புதுவரவாக புஜாரா, ராபின் உத்தப்பா, கிருஷ்ணப்பா கவுதம், மொய்ன் அலி ஆகியோர் வந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது இடத்தை பிடித்து முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

அதற்கு ஏற்றாற்போல் சென்னை அணி வீரர்கள் விளையாடுவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் உள்ளனர்.

அந்த அணியில் ஷிகர் தவான், ரகானே, ஸ்டீபன் சுமித், பிரித்விஷா, அஸ்வின், ஸ்டோனிஸ், சாம் பில்லிங்ஸ், நார்ஜே, ரபடா, சுமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோள் பட்டையில் காயம் அடைந்ததால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார். இதனால் புதிய கேப்டனாக இளம் வீரர் ரி‌ஷப்பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த அணியும் வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்கும் முனைப்பில் இருக்கிறது.

சென்னை அணியில் உள்ள அனுபவ வீரர்களுக்கும் டெல்லி அணியில் உள்ள இளம் வீரர்களுக்கும் போட்டியாக இது இருக்கும். இந்த ஆட்டம் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.