X

ஐபிஎல் கிரிக்கெட் – ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட மயங்க் அகர்வால்

அகமதாபாத்தில் மே 2 ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால், மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடினார். அவர் 19 ஓவர் முடிவில் 84 ரன்கள் எடுத்திருந்தார். 20-வது ஓவரின் 2-வது பந்தில் ஒரு ரன் அடித்தார். 4-வது பந்தை பவுண்டரிக்கும், 5-வது பந்தை சிக்சருக்கும் விளாசினார். இதனால் 95 ரன்களை எட்டினார். கடைசி பந்தில் சிக்சர் விளாசினார் சதத்தை தொடுவார் என்று இருந்தது.

ஆனால் கடைசி பந்தில் அவரால் பவுண்டரியே அடிக்க முடிந்தது. இதனால் 58 பந்தில் 99 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு ரன்னில் சதத்தை கோட்டைவிட்டார்.

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்ட 3-வது வீரர் என்ற அதிர்ஷ்டம் கைக்கூடாத வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இதற்கு முன் 2013-ல் சுரேஷ் ரெய்னா, 2019-ல் கிறிஸ் கெய்ல் ஆகியோரும் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளனர்.