ஐபிஎல் கிரிக்கெட் – அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் நடத்த பிசிசிஐ முயற்சி
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 11 வருடமாக நடைபெற்று வரும் ஐபிஎல்-க்கு உலகளவில் செல்வாக்கு உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த தொடர் இந்தியாவில் நடத்தப்படும்.
2009-ம் ஆண்டும், 2014-ம் ஆண்டும் நாடாளுமன்றம் தேர்தல் நடைபெற்றதால் தென்ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் நடத்த முயற்சிப்போம் என்று பிசிசிஐ பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
போட்டி நடைபெறும் இடம் உறுதியாக தெரியவில்லை என்பதால் பிசிசிஐ அட்டவணைனைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை.