Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த டோனி!

ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் அதிரடி ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய கேப்டன் எம்.எஸ். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் 43 வயதான எம்.எஸ். தோனி, ஐபிஎல் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற மிக வயதான வீரர் சாதனையை படைத்துள்ளார்.

ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை