Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டின் பார்வையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது

உலகில் அதிக டெலிவி‌ஷன் பார்வையாளர்களை கொண்ட போட்டிகளில் ஒன்று ஐ.பி.எல். 20 ஓவர் பேட்டியாகும். அந்த அளவுக்கு மதிப்புமிக்க விளையாட்டாக இருக்கிறது.

15-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மார்ச் 26-ந் தேதி தொடங்கியது. 8 அணிகளோடு 2 புதிய அணிகளான லக்னோ, குஜராத் அணிகள் உள்பட 10 அணிகள் விளையாடும் இந்த போட்டி மராட்டிய மாநிலத்தில்
மட்டும் நடக்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள வான்கடே, பிராபோர்ன், டி.ஒய்.பட்டீல் மற்றும் புனே ஆகிய 4 மைதானங்களில் மட்டும் போட்டி நடைபெற்று வருகிறது.

நேற்றுடன் 29 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஐ.பி.எல். பார்வையளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. முதல் வாரத்தில் டி.வி.ரேட்டிங்கில் சரிவு
இருந்தது. முதல் 8 போட்டிகளில் டி.வி. ரேட்டிங் 2.52 ஆக இருந்தது. கடந்த ஆண்டு முதல் 8 போட்டிகளில் டெலிவி‌ஷன் ரேட்டிங் 3.75 ஆக இருந்தது.

இதே போல் 2வது வாரத்திலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்த 8 போட்டிகளிலும் டி.வி. ரேட்டிங் குறைந்து வருகிறது. 15 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்களின் ரேட்டிங் 1.98 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இது 3.31 ஆக இருந்தது.

22 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களின் ரேட்டிங் 2.43 ஆகவும், 31 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களின் ரேட்டிங் 2.34 ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டு இது 3.68 ஆக இருந்தது.

சோர்வு, புதிய அணிகள் ஆகியவைகளின் காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்ததாக கூறப்படுகிறது. வரும் காலங்களில் இது சரியாகி பார்வையாளர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.