X

ஐபிஎலில் அதிவேக அரை சதம் – ரிஷப் பந்தை முந்திய ஹர்திக் பாண்டியா

கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 232 ரன்கள் குவித்தது. பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது.

அந்த அணி 8.2 ஓவரில் 58 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் ஹர்திக் பாண்டியா களம் இறங்கினார். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார். சுனில் நரைன் வீசிய 14-வது ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 17 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது ஸ்கோரில் ஒரு பவுண்டரி, 7 சிக்சர்கள் அடங்கும். 8 பந்தில் 46 ரன்கள் ஓடாமலேயே வந்தது.

17 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்த சீசனில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரிஷப் பந்த் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 18 பந்தில் அரைசதம் அடித்ததை தற்போது ஹர்திக் பாண்டியா முந்தியுள்ளார்.

Tags: sports news