சீனாவில் உள்ள மக்காவ் நகரில் ஐடிடிஎஃப் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் மான்யூவுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 6-11, 4-11, 9-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரீஜா அகுலா, உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியனான சீனாவின் ஷென் மெங்குடன் மோதினார்.
இதில் உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ஸ்ரீஜா அகுலா 4-11, 4-11, 15-13, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா ஆகிய இருவருமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து உள்ளனர்.