ஐசிசி-யின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருது – ஸ்ரேயாஸ் அய்யர், மிதாலி ராஜ் பெயர் பரிசீலனை

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துக்கான (பிப்ரவரி) சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், ஐக்கிய அரபு அமீரக பேட்ஸ்மேன் விருத்தியா அரவிந்த், நேபாள அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திபேந்திர சிங் ஐரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலி கெர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து தலா ஒருவர் சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்கு ஐ.சி.சி. யின் அங்கீகாரம் பெற்ற வாக்கு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools