இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது. இதில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். லண்டன் ஓவல் மைதானத்தில் இது அவருக்கு 3-வது சதமாகும்.
ஐசிசி தொடரில் (சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக்கோப்பை) எப்போதுமே தவான் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த சதம் மூலம் ஐசிசி தொடரில் 6 சதங்கள் விளாசியுள்ளார். இதன்மூலம் ஐசிசி தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங், சங்ககராவுடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். சச்சின் தெண்டுல்கர், கங்குலி தலா 7 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளனர்.