Tamilவிளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – விராட் கோலி, ரோகித் சர்மா பின்னடைவு

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங், பந்து வீச்சு தரவரிசையை ஐசிசி நேற்று வெளியிட்டது. இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 742 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து 10 இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்போதைய கேப்டனான ரோகித் சர்மா 754 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் கவாஜா 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 2-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

பந்து வீச்சில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான அஸ்வின் 850 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் பும்ரா 830 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் விராட் கோலி 811 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 791 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்கிறார்.