இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’ இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நிவின் பாலியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.