தங்கம் விலை சமீபத்தில் சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருந்து வருகிறது.
இதனிடையே நேற்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54 ஆயிரத்து 320-க்கு விற்பனையானது
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54 ஆயிரத்து 960-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 870 ஆக உள்ளது. ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.90,500-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.90.50-க்கு விற்கிறது.