Tamilசெய்திகள்

ஏர் இந்தியா, போயிங் ஒப்பந்தம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் – அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777-9s அகலமான விமானங்கள் மற்றும் 190 போயிங் 737MAX அகலம் குறைவான விமானங்களை இந்தியா வாங்குகின்றது. விமான வர்த்தக வரலாற்றில் இது மிகப்பெரிய கொள்முதலாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டி, வரவேற்பு அளித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பேசிய அதிபர் ஜோ பைடன், ஏர் இந்தியா-போயிங் ஒப்பந்தம் அமெரிக்காவில் 1 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்தக் கொள்முதல் 44 மாநிலங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க வேலைகளை உருவாக்கும் என தெரிவித்தார்.

இரு தலைவர்களும் அமெரிக்கா, இந்தியா உறவின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், நமது பகிரப்பட்ட முன்னுரிமைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், குவாட் போன்ற குழுக்களில் தொடர்ந்து இணைந்து பணியாற்றவும் இருவரும் உறுதிபூண்டனர்.