ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் – விமான சேவை பாதிப்பு

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால், பெங்களூரு- டெல்லி, கோழிக்கோடு- துபாய் குவைத்- தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா கண்ணூரில் இருந்து தனது விமானங்களை ரத்து செய்தது. அதன்படி, கண்ணூரில் இருந்து மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, கொச்சி விமான நிலையத்திலிருந்து நான்கு சேவைகள் நிறுத்தப்பட்டன.

அறிக்கைகளின்படி, திருவனந்தபுரம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் இருந்து சுமார் 70 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கச் சிக்கல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தாலும், அதன் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தான் ரத்து செய்ய வழிவகுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools