ஏமன் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹவுதி படைகள்!
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவூதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த சண்டையால் அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் மோஷா நகரில் உள்ள அரசு படைகளுக்கு சொந்தமான ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.