ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகும் ‘காஞ்சனா 3’

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி’.

அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா’ வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2′ படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், `காஞ்சனா’ படத்தின் மூன்றாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் `முனி’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை தமிழ் புத்தாண்டுக்கு பிறகு, தேர்தலுக்கு அடுத்த நாளான ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools