கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.
இதையடுத்து படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தயாரானபோது, படத்திற்கு மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், அனைத்தும் சரியாக செல்லும் பட்சத்தில் படம் ஏப்ரலில் திரைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.