Tamilசெய்திகள்

ஏப்ரல் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவில் ரூ.300 தரிசன டிக்கெட் விற்பனை தொடங்கியது

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாக உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சென்று சுலபமாக தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ஆன்லைன் ஓதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.