ஏன் வெட்கப்பட வேண்டும்? – தேர்தல் தோல்வி குறித்து ரோஜா விளக்கம்

ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மந்திரி ரோஜா உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வியை தழுவினர். தோல்வி குறித்து ரோஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கெட்ட காரியங்களை செய்து தோற்றால்தான் வெட்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் மக்களின் பிரச்சினைகளுக்காக எழுந்து நின்று குரல் கொடுப்போம். கண்ணியத்துடன் எழுந்து நிற்போம். மக்களின் குரலை எதிரொலிப்போம். வரும் நாட்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளுக்காக மக்கள் பக்கம் நின்று போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools