X

ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் நிலைமை கைமீறி சென்றுவிடும் – இந்திய அணியை எச்சரிக்கும் விவியன் ரிச்சர்ட்ஸ்

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடிய எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.

“இந்த ஆண்டு போட்டியை பார்க்கும் போது, இந்தியா இதுவரை விளையாடியதை போன்ற மனநிலையில் எதிர்கொள்ளும் நினைப்பில் இருக்கும். இதுவே அவர்களின் மனநிலையாக இருக்கும், நான் அதுபோன்ற டிரெசிங் ரூமில் இருந்தால் அப்படித் தான் நினைப்பேன். இதுவரை இந்த வழிமுறை நல்ல பலன் கொடுத்துள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், நிலைமை கைமீறி சென்றுவிடும்.”

அவர்கள் தோல்வியை சந்திக்காமல் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியும் என்று நம்புகிறேன். இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், அரையிறுதி சமயத்தில் ஏதேனும் போட்டியில் எதிர்பார்க்காத முடிவு கிடைத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படலாம். அவர்கள் இதுபோன்ற அச்சம் கொள்ளாமல், எதிர்மறை எண்ணங்களை தவிர்த்துவிட வேண்டும்,” என்று விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்து உள்ளார்.

Tags: tamil sports