Tamilவிளையாட்டு

ஏடிபி டென்னிஸ் தரவரிசை – முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்ட அல்காரஸ்

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

கார்லோஸ் அல்காரஸ் தொடர்ந்து 29-வது வாரமாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். ஜோகோவிச் 2-வது இடத்திலும், ரஷியாவின் மெத்வதேவ் 3-வது இடத்திலும், நார்வேயின் கேஸ்பர் ரூட் 4-வது இடத்திலும் உள்ளனர்.

இதேபோல, பெண்கள் ஒற்றையரில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், கஜகஸ்தானின் ரிபாகினா 3-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

விம்பிள்டன் பட்டத்தை முதல் முறையாக உச்சிமுகர்ந்த செக் குடியரசின் மார்கெட்டா வோன்ட்ரோசோவா கிடுகிடுவென 32 இடங்கள் எகிறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த நிலை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.