எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 99.04 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த கன்னட நடிகை
கன்னட சின்னத்திரை நடிகையாக இருந்து வருபவர் மகதி வைஷ்ணவி பட். இவர் கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். அவர் சின்னத்திரை தொடர்களில் நடித்துக் கொண்டே பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் எழுதினார்.
இந்த நிலையில் சமீபத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் நடிகை மகதி வைஷ்ணவி பட் 99.04 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். நடிப்பதில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கவனம் செலுத்தி அவர் சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு அவரது ரசிகர்கள் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.