X

எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கை நவீன ஊழலின் சாதனை – எம்.பி சு.வெங்கடேசன் தாக்கு

தேர்தல் பத்திரம் மூலமாக ஒவ்வொரு கட்சிகளுக்கும் நன்கொடையாளர்கள் அளித்த தொகை உள்ளிட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் வேண்டும் என எஸ்.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. நவீன தொழில்நுட்ப காலத்தில் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட நிலையில், அவகாசம் கேட்பது யாரை காப்பாற்றுவதற்கு? என கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில் மதுரை தொகுதி எம்.பி.யான ஏ. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது. அது நவீன அறிவியலின் சாதனை.

மும்பையிலிருக்கும் எஸ்.பி.ஐ. டெல்லியிலிருக்கும் உச்ச நீமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை.

48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை எஸ்பிஐ. இனி பின்னொட்டாக Modi Ka Parivar-ஐ இணைத்துக் கொள்ளட்டும்.

இவ்வாறு சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.