X

எல்லை மீறும் டிவி நிகழ்ச்சி – கங்கனாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வரும்போது, சல்மான் கானின் ‘பிக்பாஸ்’ மட்டுமே குறிப்பிடப்பட்டது. கிட்டத்தட்ட இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சிகளின் வடிவிலேயே, இன்னொரு நிகழ்ச்சியும் ஓடிடியில் உதயமானது. இந்த லாக் அப் நிகழ்ச்சியை நடிகை கங்கனா ரணாவத் நடத்தி வருகிறார். பாலிவுட் பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கிறார்.

72 நாட்கள் நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தடங்கல்கள், மனவலிமையை சோதிக்கும் பிரச்சினைகள் ஆகியவையே புதிய ரியாலிட்டி ஷோவின் மையமாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இருக்க நினைக்கும் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கங்கனா ரணாவத்தின் சிறையில் பல வாரங்கள் இருந்து நடத்துபவரின் கடுமையையும் அடக்குமுறையையும் தாங்க வேண்டியிருக்கும். இந்த சிறையில் யார் தங்குவார்கள், யார் தங்க மாட்டார்கள் என்பது பார்வையாளர்களின் வாக்களிப்பில் முடிவு செய்யப்படும். குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளர் சிறையில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இதில் கரண் மெஹ்ராவை தாக்கிய பரூக்கி, நிஷா ராவல் மற்றும் திருமணம் முதல் நிர்வாணம் வரை பல காரணங்களால் சர்ச்சையில் சிக்கிய பூனம் பாண்டே போன்ற சர்ச்சைபிரபலங்களே இதில் இடம் பெறுள்ளனர். யாருடைய வாழ்க்கை சர்ச்சைகளும் குழப்பங்களும் நிறைந்தது. அவர் தனது வாழ்க்கையின் பல பெரிய ரகசியங்களை முதன்முறையாக திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவம்.

இந்த லாக் அப் நிகழ்ச்சியில் பூனம் பாண்டே தனது மேலாடையை கழற்றுவதாக அளித்த வாக்குறுதியை லாக் அப் நிகழ்ச்சியில் நிறைவேற்றினார். ஆனால் பலர் எதிர்பார்த்த விதத்தில் இல்லை. பூனம் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதில் பெயர் பெற்றவர் என்பதால், அவர் முழு மேலாடையின்றி செல்வார் என்று பல பார்வையாளர்கள் நம்பினர். டி-சர்ட்டை கழற்றுவேன் என்ற வாக்குறுதியை நான் காப்பாற்றினேன், ஆனால் என்னால் விதிகளை மீற முடியாது என்று கூறி  டி-சர்ட்டை கழற்றினார்.

இதில் போட்டியாளராக கலந்து கொண்ட அரசியல் விமர்சகரான தெஹ்சீன் பூனாவாலா. சக போட்டியாளரான சயிஷா ஷிண்டேவை காப்பாற்ற சொன்ன ரகசியம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் அவரின் மனைவியுடன் உறவு கொண்டதாக கூறினார் தெஹ்சீன். அவர் மேலும் கூறியதாவது, நைட்கிளப் ஒன்றை இரண்டு நாட்கள் புக் செய்தார் அந்த தொழில் அதிபர். நானும், அவரின் மனைவியும் உறவு கொள்வதை பார்க்க வேண்டும் என்பது தான் அவர் விதித்த நிபந்தனையே. அந்த அனுபவம் நன்றாக இருந்தது. அந்த தொழில் அதிபர் சற்று தொலைவில் இருந்து பார்க்க மட்டும் செய்தார். நாங்கள் உறவு கொள்ளும்போது இடையே வரவோ, எங்களை தொடவோ கூடாது என்பது மட்டுமே நான் விதித்த நிபந்தனை. அதனால் அவர் எங்கள் அருகில் வரவில்லை என கூறி கதி கலங்க வைத்தார்.

இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகை மந்தனா கரீமி. பாக் ஜானி, ராய் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து உள்ளார். ஈரான் நாட்டை சேர்ந்தவரான மந்தனா, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில், 2வது இடமும் பிடித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில், வெளியேற்றுதல் சுற்றில் இருந்து தப்பிப்பதற்காக தனது வாழ்க்கையின் மிக பெரிய ரகசியம் ஒன்றை மந்தனா வெளியிட்டு உள்ளார். அதில் முன்னணி இயக்குனர் ஒருவருடன் தனக்கு ஏற்பட்ட ரகசிய உறவு பற்றி வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அதனால் கர்ப்பம் ஏற்பட்டு பின் கருக்கலைப்பு செய்தேன். அந்த இயக்குனர் பெண் உரிமைகள் பற்றி பேசுபவர், பலருக்கு கடவுளாக இருப்பவர் என்றும் மந்தனா பேசும்போது கூறியுள்ளார்.

இது போன்ற வரம்பு மீறும் செயல்களால், பேச்சுக்களால் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியை 10 கோடிக்கும் அதிகமானோர் கண்டு ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது.