இந்தியாவில் கடந்த சில தினங்களாக எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கி வருகிறது.
எரிபொருள் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வுக்கு மகாராஷ்டிர மந்திரி ஆதித்ய தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அம்மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது. அதனால் எரிபொருள் விலை அதிகரித்துவிட்டது. விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். மகாராஷ்டிராவில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டன.
கல்லூரிகளில் அரசியல் கூடாது, ஆனால் அது இப்போது செய்யப்படுகிறது. நம் மாணவர்களின் பாடத்திட்டம் மிகவும் பழமையானது. அவர்களுக்கு புதிய விஷயங்களைக் கற்பிக்க வேண்டும்.
மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம். மகாராஷ்டிரா யார் முன்பும் தலைகுனியாது. நமது உழைப்பே நமது பலம். இந்த சக்தியை டெல்லியில் அமர்ந்திருக்கும் மக்களிடம் காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.