X

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2022-23-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, இணையதள விண்ணப்ப பதிவு 22-ம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி ஆகும். இது தொடர்பான இணைய தள முகவரிகள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என தெரிவித்துள்ளார்.