மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி தொடங்கி இன்றுடன் நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து, 50 ஆண்டு தொடங்குகிறது. இதனை அடுத்து அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அதிமுக பொன்விழாவையொட்டி சசிகலா எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார்.
பொன்விழா ஆண்டு கொடியேற்றம் நிகழ்வையொட்டி கல்வெட்டு திறக்கப்பட்டது. தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவில்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
தி.நகரில் உள்ள நினைவு இல்லத்தில் பொன்விழா ஆண்டு கொடியேற்றம் நிகழ்வையொட்டி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.