என் வளர்ச்சிக்கு மக்கள் சக்தியே துணை – வடிவேலு

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிடிப்பில் வடிவேலுக்கும் இயக்குனர் சிம்பு தேவனுக்கும் மோதல் ஏற்பட்டு படம் நின்று போனது. இதனால் தனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் பட அதிபர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். பேச்சுவார்த்தையில் மீண்டும் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று வடிவேல் உறுதியாக மறுத்து விட்டார்.
இதனால் புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தடை விதித்தனர். 3 வருடங்களுக்கு மேலாக படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக வடிவேல் தற்போது அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- “மக்களை நகைச்சுவையால் சிரிக்க வைப்பதால் தினமும் நான் பிறந்து கொண்டுதான் இருக்கிறேன். எனது வளர்ச்சிக்கு காரணம் மக்கள் சக்திதான். மக்கள் சக்தி இல்லை என்றால் இந்த வடிவேலு கிடையாது. நீங்கள் ஏன் இன்னும் நடிக்காமல் இருக்கிறீர்கள் என்று என்னை பார்த்து கேள்வி எழுப்பலாம்.
விரைவில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த மாதம் முடிவதற்குள் நான் நடிக்க வருவேன். வாழ்க்கை என்றால் சைத்தான், சகுனி என்று இருக்கத்தான் செய்யும். எல்லோருடைய வாழ்க்கையிலும் அது உண்டு. அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா? ஆங்காங்கே ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்யும். ஆனால் மக்கள் சக்தி இருக்கிறது. மறுபடியும் சொல்கிறேன். நான் மீண்டும் நடிப்பேன். இவ்வாறு வடிவேல் கூறி உள்ளார்.
இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools