‘என்.ஜி.கே’ படக்குழுவுக்கு பரிசளித்த சூர்யா!
2019-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் ‘என்.ஜி.கே’ ஒன்று. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத், சிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு ஜனவரி 12-ம் தேதியுடன் முடிவு அடைந்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் குழு, ஒளிப்பதிவாளர்கள் குழு, கலை இயக்குநர்கள் குழு என அனைவருக்கும் ஒரு பவுன் தங்க காசு பரிசளித்துள்ளார் சூர்யா.
கடைசி நாளில் சூர்யா அளித்த பரிசால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ‘என்.ஜி.கே’ படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் “சூர்யாவுடனான பயணம் சிறப்பானதாக இருந்தது.
அவருடைய திறமை ஈடுபாடு கண்டு வியந்து விட்டேன். ‘என்.ஜி.கே’ படக்குழு அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா “செல்வராகவன்.. திரைக்கும் முன்னும், திரைக்குப் பின்னும் என்னை புதிய உயரத்துக்கு நகர்த்தியதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.