என்.சி.சி உயர் மட்டக்குழுவில் இடம் பிடித்த டோனி

இந்திய வரலாற்றில் 74 ஆண்டுகள் பழமையான அமைப்பான என்.சி.சி.யை தற்போது இருக்கும் நவீன காலச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  இதனடிப்படையில்,  உயர் மட்டக்குழு ஒன்றை முன்னாள் எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையில் மத்திய பாதுகாப்பு துறை அமைத்தது.

இந்தக் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, எம்.பி. விநய் சஹஸ்ரபுத்தே , மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அமர்த்தியுள்ளது.  இவர்கள் என்.சி.சி.யை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் பாராசூட் பிரிவில் ஒருமாதம் தங்கியிருந்து பயிற்சி பெற்றதால் தோனி இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்திய முன்னாள் கேப்டனான டோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்ணல் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools