என் உடல் நிலை சரியாக சில மாதங்கள் ஆகும் – பிக் பாஸ் அர்ச்சனா உருக்கம்

சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார். சமீபத்தில் இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பெற்றதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா முதல் முறையாக யூடியூப் சேனலில் நேரலையில் வந்து பேசினார். அவரை பார்த்த ரசிகர்களோ, எப்பொழுது மீண்டும் வேலைக்கு வருவீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னால் இப்போ கூட வர முடியும். ஆனால் என் வலது தொடையில் 16 தையல் போடப்பட்டிருக்கிறது.

16 தையல் போடப்பட்டிருப்பதால் கால் பலவீனமாக இருக்கிறது. ஷூட்டிங்கிற்கு வந்தால் 15, 16 மணிநேரம் நிற்க வேண்டும். என்னால் தற்போது அவ்வளவு நேரம் நிற்க முடியாது. நான் சரியாக இன்னும் சில மாதங்கள் ஆகும். என் மகளும், சகோதரியும் என்னை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்கள். செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஒரு பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools