என் ஆல் டைம் பேவரைட் சிம்பு தான் – பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா

ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி:-

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, நிறைய படங்களில் நடிக்கிற வாய்ப்பு வந்தது. கதையைத் தேர்வு செய்வதில் ரொம்ப கவனமாக இருக்கிறேன். படத்துல ஹீரோவுக்கு மட்டுமல்ல, ஹீரோயின் ரோலுக்கும் முக்கியத்துவம் இருக்கணும். அதனால எனக்கு நடிக்க முக்கியத்துவம் இருக்கிற மாதிரியான கதையைத் தேர்வு செய்கிறேன். ஆரி கூட லவ் ஜானர்ல ஒரு படம் பண்றேன்.

மகத்கூடவும் ஒரு படத்துல நடிக்கிறேன். இந்த ரெண்டுமே என்னுடைய கேரியர்ல முக்கியமான படங்களாக இருக்கும். என்னைப் பார்க்க வர்ற தமிழ் ரசிகர்கள், அவங்க வீட்டுப் பொண்ணா நெனைச்சு, என்கிட்ட பேசுறாங்க. பிக்பாஸ்ல என்கூட இருந்தவங்க எல்லார்கூடவும் தொடர்புல இருக்க முடியலை. ஆனா, எங்களுக்குனு ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு. அதுல நிறைய அரட்டை அடிப்போம். தனிப்பட்ட முறையில யாஷிகா, மகத் கூட தொடர்ந்து பேசிட்டிருக்கேன்.

யாஷிகா ஷூட்டிங்ல எவ்வளவு பிஸியா இருந்தாலும் என்மேல அக்கறை காட்டி விசாரிப்பாங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற ஸ்க்ரிப்ட் அமைஞ்சா செமயா இருக்கும். தேசிய விருது வாங்கணும்ங்கிறதுதான் என் கனவு. அதனால நம்ம படங்களுக்கு நம்மதான் டப்பிங் பேசணும். எனக்குத் தமிழ் தெரியாதுங்கிறதால, என்னுடைய முந்தைய படங்களுக்கு நான் டப்பிங் பேசினது இல்லை. இப்போ நான் நல்லா தமிழ் கத்துகிட்டேன். இனிமேல் என் படங்களுக்கு நானே டப்பிங் பேசலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

என்னுடைய ஆல் டைம் பேவரைட் சிம்புதான். சினிமா வர்றதுக்கு முன்னாடியே எனக்கு சிம்புவைப் பிடிக்கும். ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. இது வரைக்கும் அவர்கிட்ட இதைச் சொன்னது இல்லை. அதே மாதிரி நடிகைகள்ல நயன்தாரா, அதிதி பாலன், ரெண்டு பேருடைய நடிப்பும் ரொம்ப பிடிக்கும். ஏன்னா, இந்த ரெண்டு பேருமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பாங்க. பெரிய இயக்குனர்கள் படங்கள்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு, அது சீக்கிரமே நிறைவேறும்’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools