X

என் அப்பா என்பதற்காக கமலுக்கு வாக்களிக்கப் போவதில்லை – ஸ்ருதி ஹாசன்

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார். அவரது மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், “உங்களை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது அப்பா. மேம்பட்ட எதிர்காலத்துக்காக, சமுதாயத்துக்காக உங்களிடம் ஒரு பார்வை இருக்கிறது.

அதை உங்கள் முயற்சி, ஆர்வம், உண்மை மூலமாக கண்டுள்ளீர்கள். உங்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த அனைவருக்கும், உங்கள் டார்ச்லைட் மூலம் ஒரு பிரகாசமான எதிர்காலம் வர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த பதிவுக்கு டுவிட்டரில் ஸ்ருதிஹாசனை பின்தொடர்பவர் ஒருவர், “எனது ஓட்டு உங்களுக்குத் தான் எப்படி சொல்லலாம். உறவு என்பதைத் தாண்டி, எந்த வேட்பாளர் சரியானவர் என தேர்வு செய்ய வேண்டும். அது உங்களுடைய அப்பாவாக இருந்தாலும்” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஸ்ருதிஹாசன் பதிலளிக்கும் விதமாக, “சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவர் எனது அப்பா என்பதால் ஓட்டு இல்லை. அவர் மாற்றத்துக்காக வேலை செய்கிறார் என்பதாலேயே என் வாக்கு” என்று தெரிவித்துள்ளார்.