X

என்னை எவ்வளவு இழிவுப்படுத்தினாலும், தொடர்ந்து போராடுவோம் – அனுராக் தாகூரின் சாதி வெறி தாக்குதலுக்கு ராகுல் காந்தி பதிலடி

பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக உள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறி வருகிறது.

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் இதை குறிப்பிட்டிருந்தது. ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவோம் என்பதில் உறுதியாக உள்ளது. இந்தநிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அனுராக் தாகூருக்கும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.

அப்போது திடீரென அனுராக் தாகூர் சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள். முன்னாள் பிரதம மந்திரி ராஜிவ் காந்தி மக்களவையில் ஓபிசி இடஒதுக்கீட்டை எதிர்த்தார் என்பதை சபாநாயகருக்கு நினைவூட்ட விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

அனுராக் தாகூர் வெளிப்படையாக ராகுல் காந்தியை சாதி குறித்து இழிவுப்படுத்தி பேசியது எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில் ராகுல் காந்தி “நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம். ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தில் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம். என்றார்.