என்னுடைய முன்னுதாரணம் எம்.எஸ்.டோனி! – ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவாலிபையர்-1 நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டனர். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனியுடன் மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். போட்டோவுக்கும் போஸ் கொடுத்தனர்.

எம்எஸ் டோனியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘‘என்னுடைய முன்னுதாரணம், என்னுடைய சகோதரர், என்னுடைய நண்பர், என்னுடைய லிஜெண்ட் எம்எஸ் டோனி’’ என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார்.

எம்எஸ் டோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கற்றுக் கொண்டு ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி வருகிறார் ஹர்திக் பாண்டியா.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news