மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பாடல்கள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “என்னுடைய அனுபவத்தில் பெஸ்ட் மியூசிக் ஆல்பம், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னம் சாரின் பொன்னியின் செல்வன் என்பதில் சந்தேகமே இல்லை. மிகச் சிறிய இடத்தில் கூட கவனம் செலுத்துவது பிரம்மிக்க வைக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.