Tamilசினிமா

எனது 36 வருட தவம் – இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உருக்கமான பதிவு

மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமலின் 232வது படமான ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் டிரைலர் வரும் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜை கமல்ஹாசன் பாராட்டி உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளது. “36 வருட தவம். எனக்குள் இருக்கும் இயக்குனரை என் உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்ட” என்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.